Monday 30 November 2015


கடிகார கலாட்டா

ஒன்று

இவர்:  ஏங்க, மணி என்னங்க ஆவுது?


அவர்  (சற்றே இழுத்தாற்போல)  அஞ்சி… பத்து…


இவர் சீச்சீ…. என்னைய்யா,  மணி கேட்டா அஞ்சி பத்துன்னு இழுக்கிறே?


அவர்:  அய்யே, வள்ளல் பரம்பர,  மூஞ்சியப் பாரு,  மணி அஞ்சி பத்துன்னு சொன்னேன்யா.


இரண்டு:


இவர்: ஏங்க,மணி என்னங்க ஆவுது?

அவர்:  பத்து பத்து.

இவர்:  ஒரு தரம் சொன்னா போதும். நான் ஒன்னும் செவிடு இல்ல.

அவர்:  அட புத்திசாலியே, பத்து மணி பத்து நிமிஷம்னு சொன்னேன்.


மூன்று: 


இவர்: ஏங்க,மணி என்னங்க ஆவுது?

அவர்: ஃபோர் ட்வெண்டி

இவர்: ஏய்,மரியாதயா பேசு, யாரப் பாத்து ஃபோர் ட்வெண்டி எங்கிறே?

அவர்: அய்யா சாமி, மணி நாலு இருபதுனு இங்கிலீஷ்ல சொன்னேன்.


நான்கு:


(ஒரு பெண் கூடையில் எதையோ எடுத்துக் கொண்டு வருகிறார். எதிரே மூவர் வருகின்றனர். மூவரும் ஒரே சமயத்தில் அவரிடம் கேள்வி கேட்கின்றனர்)

ஒருவர்: கூடையில் என்ன?

மற்றவர்:  மணி என்ன?

மூன்றாமவர்: உன் பேரென்னம்மா?

கூடை வைத்திருப்பவர்:  ஆரஞ்சு.

ஒருவர்: என்ன, மூனு பேருக்கும் ஒரே பதில் சொல்றீங்க?

கூடை வைத்திருப்பவர்:  கூடையில் இருப்பது ஆரஞ்சு பழம். மணி ஆறு அஞ்சி ஆவுது. என் பேரு ஆர். அஞ்சு.அதான் மூனு பேருக்கும் ஒரே பதில் சொன்னேன்.